Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

#BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

Tamilwire 2 days ago

கோதரியின் நகைகளை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் முத்துக்குமார் என்பவர் பிரியா என்ற பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவருடைய மனைவி பிரியா (39). இவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவரது சகோதரி முத்துலட்சுமி என்பவருடன், தட்டார்மடத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முத்துக்குமார் (36) என்பவர் பழகி வந்தாராம். இதனால் முத்துலட்சுமியின் நகைகளை வாங்கி முத்துக்குமார் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.

இதைத் தொடர்ந்து பிரியா, இன்று முத்துக்குமாரிடம் சென்று நகைகளை திருப்பி கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் பிரியாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்காரர், பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சகோதரியின் நகைகளை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் முத்துக்குமார் என்பவர் பிரியா என்ற பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire