Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

#BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

Tamilwire 1 week ago

த்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார்.

பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், 'முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்' என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் முன் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றது தான் முக்கியம் என்று ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவிடம் பேரம் பேசு இருப்பதாகவும் வாதிடப்பட்டது. அசோக் குமார் பெயர் இருக்கிறது என்றும் அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருக்கிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேரம் பேசியது தொடர்பான விசாரணை பெங்களூரு வரை நீள்கிறது என்றும் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் ஹவாலா பணம் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்தவர் ஆதாரங்களை அழித்துவிட்டார் என்றும் 35 கோடி பேரம் என்பது யூகம்தான் எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கு சம்பந்தப்பட்ட ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் போலீஸ்காரத்தில் தெரிவிக்கப்பட்டது. உறுதியான ஆதாரங்கள் உள்ளன விசாரணை நிலை அறிக்கையில் தாக்கல் செய்கிறோம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வாசிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அசோக் குமார் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேலையும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், 'முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்' என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire