Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அதிரடி... சென்னை, மதுரையில் 2வது நாளாக களமிறங்கிய வருமான வரித்துறை...!

#BREAKING செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அதிரடி... சென்னை, மதுரையில் 2வது நாளாக களமிறங்கிய வருமான வரித்துறை...!

Tamilwire 2 days ago

பிரபலமான செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல செயற்கை கருத்தரிப்பு மையமான ஐஸ்வர்யா ஏஆர்சி உள்ளிட்ட பல்வேறு பிரபலமான செயற்கை கருத்தரிப்பு மையங்களைக் குறிவைத்தே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாரில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம், கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐஸ்வர்யா ஏஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அதேபோன்று கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையம், எக்மோரில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையம் உள்ளிட்ட சென்னையில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

எதற்காக இந்தச் சோதனை நடைபெறுகிறது என்று பார்த்தோம் என்றால், இந்தக் கருத்தரிப்பு மையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் முறையாகப் பணம் பெற்றுவிட்டு, அதற்கான முறையான ரசீது அல்லது பில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில், வரி ஏய்ப்பு தொடர்பாக ஏதேனும் புகார்கள் அதிகளவில் வந்துள்ளதா, இந்த மையங்களில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என்ற கோணங்களில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் மேற்கொண்டுள்ள கருத்தரிப்பு சிகிச்சைகளுக்காக எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது, அதில் எவ்வளவு தொகைக்கு முறையாக பில் வழங்கப்பட்டுள்ளது, முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா, அதில் ஏதேனும் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், எவ்வளவு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்பது குறித்தும் முழுமையான தகவல்கள் தெரியவரும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire