Dailyhunt
#BREAKING:  விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

#BREAKING: விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

Tamilwire 1 week ago

2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 30ஆம் தேதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் இருப்பதால் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது அரசியல் அறிமுகத்தை முழுமையாக்கும் விதத்தில் சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார்.

இந்த இரு தொகுதிகளிலும் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், மார்ச் 30 அன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்காக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து காலையில் புறப்பட்டு தனி விமான மூலம் திருச்சி சென்றடைந்தார்.

அங்கிருந்து பரப்புரை வாகனம் மூலம் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடத்திற்கு சென்றார். வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜயை காண்பதற்காக ஏராளமான தொண்டர்கள் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு விஜய் சென்றடைந்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 30ஆம் தேதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் இருப்பதால் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire