Dailyhunt
"C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

"C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

Tamilwire 1 week ago

மிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 118 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் ஜோசப் விஜய் நாளை காலை 11 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இது 2021இல் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதே தேதியாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் பதவி இருக்கும் விழாவில் ஐந்தாயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire