Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
CBI கேட்பீங்களா..? எதிர்க்கட்சிகளை மிரட்டுவீங்களா.? சொல்லுங்க CM..! விளாசிய அப்பாவு..!!

CBI கேட்பீங்களா..? எதிர்க்கட்சிகளை மிரட்டுவீங்களா.? சொல்லுங்க CM..! விளாசிய அப்பாவு..!!

Tamilwire 3 weeks ago

மிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திமுக தலைவர் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டு சிலர் விஷம பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம், த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு திமுக முட்டுக்கட்டை போடாது என்று சொன்ன வார்த்தையை திமுக தலைவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நடந்த உண்மை தேர்தல் முடிவுகள் வந்த நாள் இரவே அதிமுகவின் ஆதரவை த.வெ.க கோரியதாகவும் அதற்கு திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சில நிபந்தனைகள் விதித்ததாகவும் அதனை ஏற்காத தவெக ஆத்திரத்தில், அதிமுகவை உடைத்து சின்னாபின்னமாக்கி வருவதாகவும் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பேசப்பட்டு வருகிறது என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த உண்மைகளை ஒட்டுமொத்தமாக மறைத்து விட்டு தமிழக முதல்வர் விஜய் அதிமுக எம்எல்ஏக்கள், கல்லாப் பெட்டி எம்.எல்.ஏக்கள், அமமுக எம்.எல்.ஏ, தற்போது ஆதரவு கொடுத்துவரும் கட்சி எம்.எல்.ஏக்கள், வைகோவின் பத்திரிகை வாக்குமூலம் மற்றும் தொடர்ந்து அதிமுகழக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய சொல்லி கட்சியில் சேர்த்து கொண்டிருப்பது வரை த‌.வெ.க குதிரை பேரங்களை தொடர்ந்து செய்து வருகிறது என்றும் கூறினார்.

இத்தொடர் குற்றங்களை விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, கரூரில் 41-பேர் இறந்ததற்கு CBI விசாரணை கேட்டதுபோல், இதற்கும் CBI விசாரணை கேட்பீர்களா ? அல்லது தமிழக காவல்துறையை ஏவி எதிர்கட்சிகளை மிரட்டுவீர்களா? என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திமுக தலைவர் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டு சிலர் விஷம பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம், த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு திமுக முட்டுக்கட்டை போடாது என்று சொன்ன வார்த்தையை திமுக தலைவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire