Dailyhunt
ஈரான் போர் நிறுத்தம் அமலிலும் ஓயாத குண்டுமழை! லெபனான் மீது இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

ஈரான் போர் நிறுத்தம் அமலிலும் ஓயாத குண்டுமழை! லெபனான் மீது இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

Tamilwire 1 week ago

மெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் நேற்று (ஏப்ரல் 08) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உலக நாடுகள் இந்த அறிவிப்பை வரவேற்றுக்கொண்டிருந்த சில மணி நேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே மிகக் கடுமையான மற்றும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் எடர்னல் டார்க்னஸ்' (Operation Eternal Darkness) எனப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலில், இஸ்ரேலிய விமானப் படையின் 50 போர் விமானங்கள் ஒரே நேரத்தில் லெபனானின் பல்வேறு பகுதிகளில் குண்டுகளை வீசின. மின்னல் வேகத் தாக்குதலில் வெறும் 10 நிமிட இடைவெளியில் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) அறிவித்துள்ளது. பெய்ரூட்டின் மையப்பகுதி, தெற்கு லெபனான், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் டயர் ஆகிய இடங்கள் குறிவைக்கப்பட்டன.

லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலின்படி இந்தத் தாக்குதல்களில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர். 722 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பெய்ரூட்டின் வர்த்தக மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி குண்டுகள் வீசப்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை மறுத்துள்ளார்: ஈரான் உடனான ஒப்பந்தம் ஹிஸ்புல்லா அமைப்பிற்குப் பொருந்தாது என இஸ்ரேல் தரப்பு வாதிடுகிறது. மாறாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரும் "லெபனான் இந்தப் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல" எனத் தெரிவித்தது லெபனான் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க் ஆகியோர் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இத்தகைய அழிவை ஏற்படுத்துவது நம்பமுடியாத கொடுமை" என ஐநா சாடியுள்ளது.

லெபனானின் சுகாதாரக் கட்டமைப்பு ஏற்கனவே சிதைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க சர்வதேச சமூகத்தின் அவசர உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் நேற்று (ஏப்ரல் 08) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலக நாடுகள் இந்த அறிவிப்பை வரவேற்றுக்கொண்டிருந்த சில மணி நேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே மிகக் கடுமையான மற்றும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire