Dailyhunt
'எல்லாம் முடிஞ்சுது... கிளம்புங்க...' - அலங்கோலமான அண்ணா அறிவாலயம்... பந்தல்கள், எல்.இ.டி. ஸ்கிரீன்கள் அகற்றம்...!

'எல்லாம் முடிஞ்சுது... கிளம்புங்க...' - அலங்கோலமான அண்ணா அறிவாலயம்... பந்தல்கள், எல்.இ.டி. ஸ்கிரீன்கள் அகற்றம்...!

Tamilwire 6 days ago

மிழகத்தின் தற்போதைய தேர்தல் முன்னிலை நிலவரங்கள், ஒரு திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியை நினைவூட்டும் வகையில் பரபரப்பாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் இது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது என கருதப்பட்டாலும், தற்போதைய நிலவரங்கள் அதற்கு மாறான சித்திரத்தை வெளிப்படுத்துகின்றன.

முக்கியமாக, திமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் பல்வேறு தொகுதிகளில் சவால்களை சந்தித்து வருவது கவனிக்கப்படுகிறது. தற்போது பல இடங்களில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இறுதி முடிவுகள் அல்ல; நிலைமைகள் மாற்றமடைய வாய்ப்பு இருக்கிறது என்றாலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் 109 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

சென்னையில், தமிழக வெற்றி கழகம் கணிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் இக்கட்சி முன்னிலை வகிப்பது, திமுகக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. துறைமுகம் தொகுதியைத் தவிர்த்து, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, கொளத்தூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், துறைமுகம் தொகுதியில் மட்டும் அமைச்சர் சேகர் பாபு தாவேக்காவுடன் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகிறார். அந்தத் தொகுதியிலும் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடிய சூழல் காணப்படுகிறது. ஆனால் சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பிற கட்சிகள் தக்க வைத்திருப்பதாக தற்போதைய முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் அண்ணாநகர், சேப்பாக்கம், பெரம்பூர், தியாராய நகர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றிருக்கிறது. இதனால் திமுகவின் 2.O கனவில் மண் விழுந்துள்ளது. திமுக நிச்சயம் 2வது முறையாக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த கட்சி தொண்டர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எப்படியும் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த திமுகவிற்கு இது பெருத்த ஏமாற்றமாக மாறியுள்ளது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி திமுக வெறும் 53 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்த நிலையில், தவெக 110 தொகுதிகளிலும், அதிமுக 70 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. இதன் மூலம் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது உறுதியானது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக தலைமை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ரிசல்ட் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த பந்தல்கள் மற்றும் எல்.இ.டி. ஸ்கிரீன்களை அகற்றியுள்ளனர். இதனால் வெற்றி கொண்டாட்டத்திற்காக வந்த திமுக தொண்டர்கள் வாடிய முகத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தின் தற்போதைய தேர்தல் முன்னிலை நிலவரங்கள், ஒரு திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியை நினைவூட்டும் வகையில் பரபரப்பாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் இது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது என கருதப்பட்டாலும், தற்போதைய நிலவரங்கள் அதற்கு மாறான சித்திரத்தை வெளிப்படுத்துகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire