Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

"என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" - ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

Tamilwire 1 week ago

டிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து மற்றும் குடும்பப் பிரச்சனைகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா செய்தியாளர்களைச் சந்தித்து உணர்ச்சிப்பூர்வமாகத் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்கப் பேசிய சுஜாதா, "நாங்கள் ரவி மோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. அது மிகப்பரிய தொகை; இத்தனை ஆண்டுகளாக எங்கள் பேரக் குழந்தைகளுக்காக நாங்கள் எந்தச் சலுகையையும் கேட்டதே இல்லை. ரவி மோகனின் இரண்டு மகன்களுக்கும் ஆண்டுக்கு ரூ.86 லட்சம் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆர்த்திக்கு மாத ஜீவனாம்சமாக ரூ.3 லட்சமும், இரண்டு மகன்களின் பராமரிப்பிற்குத் தலா ரூ.1 லட்சம் என மொத்தம் மாதம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

குழந்தைகளைச் சந்திப்பது குறித்துப் பேசிய அவர், "ரவி மோகன் மாதம் முழுவதும் தன் குழந்தைகளை நேரில் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடந்த கால சம்பவங்களால் குழந்தைகள் தற்போது உளவியல் ரீதியான பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதால், அவர்களை நேரில் சந்திக்கக் குழந்தைகளே தற்போதைக்கு விரும்பவில்லை. என் மகளின் திருமண வாழ்க்கையைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. ரவி மோகன் தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்; அவர் இன்னமும் தனது தோழியுடன் தான் இருக்கிறார்" எனச் சாடினார்.

மேலும், "நாங்கள் அவருக்குப் பில்லி, சூனியம் வைத்ததாக ரவி மோகன் கூறுவது அப்பட்டமான பொய். ஒரு தோழிக்காகத் தன் மனைவியை சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தவறாகச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? ஆர்த்தி இன்னமும் ரவி மோகனுடன் இணைந்து வாழவே விரும்புகிறார். அதற்காகத் தான் அவர் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். நான் தயாரிக்கும் திரைப்படத்தில் ரவி மோகன் முறையான சம்பளம் வாங்கியுள்ளார்.

அவருடைய பணத்தை நான் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினால், அதை ஆதாரத்துடன் பொதுவெளியில் நிரூபிக்கத் தயாரா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். ஆர்த்தியின் தாயார் சுஜாதா அளித்துள்ள இந்த உணர்ச்சிப்பூர்வ விளக்கம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து மற்றும் குடும்பப் பிரச்சனைகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா செய்தியாளர்களைச் சந்தித்து உணர்ச்சிப்பூர்வமாகத் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்கப் பேசிய சுஜாதா, "நாங்கள் ரவி மோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. அது மிகப்பரிய தொகை; இத்தனை ஆண்டுகளாக எங்கள் பேரக் குழந்தைகளுக்காக நாங்கள் எந்தச் சலுகையையும் கேட்டதே இல்லை. ரவி மோகனின் இரண்டு மகன்களுக்கும் ஆண்டுக்கு ரூ.86 லட்சம் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆர்த்திக்கு மாத ஜீவனாம்சமாக ரூ.3 லட்சமும், இரண்டு மகன்களின் பராமரிப்பிற்குத் தலா ரூ.1 லட்சம் என மொத்தம் மாதம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire