Dailyhunt
FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

Tamilwire 2 weeks ago

டப்பாடி பழனிச்சாமி அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துவிட்டதாக கூறி வரும் விவகாரம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு எழுந்த ஒரு முக்கியமான அரசியல் சர்ச்சையாகும்.

இது இரு கட்சிகளுக்கும் இடையேயான பரஸ்பர குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டார்.

அதில் பல்வேறு நலத்திட்டங்கள், குடும்ப உதவித் தொகை, பெண்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, வருமான வரி வரம்புக்கு உட்படாத குடும்பங்களுக்கு ஒரு முறை ரூ.10,000 உதவித் தொகை வழங்குவது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து திமுகவும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் 'இல்லத்தரசி' திட்டம் எனும் பெயரில் குடும்பங்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றன.

இந்த நிலையில், தென் தமிழ்நாட்டில் பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். 'அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்துள்ளது திமுக' என்று அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, ரூ.8,000 கூப்பன் திட்டம் அதிமுகவின் ரூ.10,000 உதவித் தொகை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும், திமுகவிடம் புதிய யோசனைகள் இல்லை என்றும் அவர் வாதிட்டார். மேலும், 'திமுகவில் ஆட்களே இல்லை, அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கே அவர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்' என்று கூறி, திமுகவின் அறிக்கை தயாரிப்பில் படைப்பாற்றல் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்தார். உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கலைஞர் கருணாநிதியின் வாசகத்தை கூட விடாமல் copy அடித்து தனது தேர்தல் அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி வைத்திருப்பதாக கூறினார். நன்றாகப் படிக்கும் மாணவர்களைப் பார்த்துதான் Copy அடிப்பார்கள் என்றும் Fail ஆகும் மாணவர்களைப் பார்த்து யாராவது Copy அடிப்பார்களா எனவும் கிண்டல் அடித்து உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துவிட்டதாக கூறி வரும் விவகாரம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு எழுந்த ஒரு முக்கியமான அரசியல் சர்ச்சையாகும். இது இரு கட்சிகளுக்கும் இடையேயான பரஸ்பர குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire