Dailyhunt
FCRA கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்..! முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்..!!  அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

FCRA கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்..! முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்..!! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

Tamilwire 1 week ago

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகம் சார்ந்த பிரதமர் மோடியை கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருப்பதாகவும் கிறிஸ்தவ நிறுவனங்களை குறிவைத்து எஃப் சி ஆர் ஏ மசோதா நிறைவேற்றப்படுவதாகவும் கூறினார். தாம் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுப்பினார். இந்த மசோதாவால் சிறுபான்மையின மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கண்துடைப்புக்காக கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாகவும் இந்த மசோதாவால் பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாதுதொண்டு நிறுவனங்களை இயக்குவது எந்த வகையில் தேச பாதுகாப்பிற்கு எதிரானது என்று திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பி இருந்தார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள எப்.சி.ஆர்.ஏ சட்ட திருத்தம் பல்வேறு கேள்விகளை எழுப்பும் என்றும் கூறியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரானது இந்த சட்ட திருத்தம் என்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் FCRA சட்ட திருத்தம் மூலம் எந்த காரணமும் இல்லாமல் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு சென்று சேரும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், FCRA சட்டத் திருத்தம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். FCRA திருத்த மசோதா கிறிஸ்தவா்களுக்கு எதிரானது என முதலமைச்சா் பொய் பிரச்சாரம் செய்கிறாா் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தான் 1976ஆம் ஆண்டு FCRA சட்டத்தை கொண்டுவந்தது என்றும் குறிப்பிட்டு பேசினார்.வெளிநாட்டு நிதிகளை ஒழுங்குபடுத்தும் FCRA திருத்த மசோதா குறித்து அண்ணாமலை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire