Dailyhunt
"இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறது ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை..."  - இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க இரங்கல்...!

"இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறது ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை..." - இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க இரங்கல்...!

Tamilwire 1 week ago

மிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது 'சூப்பர் குட் பிலிம்ஸ்' சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தமிழில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.

கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக 'மாரீசன்' படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மரணம் குறித்து பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ தற்போது பெரிதும் பேசப்படுகிறது.

"40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளோடு சென்னைக்கு வந்தேன். அப்போது என்னிடம் எதுவுமே இல்லை. உதவி இயக்குநராக வேலை பார்த்து, ஒரு நாள் இயக்குநராக வேண்டும் என்று பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டிக்கொண்டே இருந்தேன்.

அந்த நாட்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருந்தேன். அப்போது தான் ஆர்.பி. சவுத்ரி சாரை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அவர் அந்தக் கதையை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே 'ஓகே' சொன்னார்.

அந்த படம் தான் 'புது வசந்தம்'. அந்த படம் வெளியான பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. இன்று நான் வசிக்கும் வீட்டிற்கே 'புது வசந்தம்' என்று பெயர் வைத்திருக்கிறேன். இன்று நான் நிம்மதியாக சாப்பிட்டு, அமைதியாக வாழ்கிறேன் என்றால், அது அவர் போட்ட பிச்சை. அவர் இல்லாமல் போய்விட்டார் என்பது எனக்கு மிகப்பெரிய துக்கம். அவர் எப்போதும் 100 படங்களை தயாரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால் அதை பார்க்க அவர் இல்லை என்பதே மிகவும் வேதனை அளிக்கிறது." என்று இயக்குனர் விக்ரமன் கண்ணீர் மல்க பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது 'சூப்பர் குட் பிலிம்ஸ்' சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தமிழில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக 'மாரீசன்' படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire