Dailyhunt
'இன்று போய்... நாளை வா....' - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

'இன்று போய்... நாளை வா....' - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

Tamilwire 2 weeks ago

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளரின் வேட்பு மனுமுழுமையாக நிரப்பப்படவில்லை என கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் திருப்பி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்6 ஏப்ரல் 2026 ஆகும். மேலும் வேட்புமனு பரிசீலனை 7 ஏப்ரல் நடைபெற உள்ளது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 9ஏப்ரல் ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக இதுவரை ஆயிரத்து 361 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 30 ஆம் தேதியே முதவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும், நாதக சீமான் காரைக்குடி தொகுதியிலும், சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் என அடுத்தடுத்து வேட்புமனுத்தாக்கலை செய்துள்ளனர்.

நாளை ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால், திங்கட்கிழமை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுகவும், எதிர்க்கட்சி அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளில் வேட்பு மனுக்களை சமர்ப்பித்து வருகின்றன.

இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சரவணன் என்பவர் விஜய்யால் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் வேல் முருகனிடம் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சரவணன் தனது வைப்பு மனுவை வழங்க வருகை தந்தார்.

மனுவை வழங்கிய பின் மனுவை முழுமையாக பார்த்த போது மனு முழுமையாக நிரப்பாது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக வேட்புமனுவை வேட்பாளர் சரவணன் இடமே வழங்கினார்.

மூன்று மணி ஆக இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே உள்ளது எனவும் அதற்குள் முடிந்தால் நிரப்பி தாருங்கள் அல்லது திங்கள்கிழமை வாருங்கள் என்று கொடுத்து அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளரின் வேட்பு மனு
முழுமையாக நிரப்பப்படவில்லை என கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் திருப்பி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire