Dailyhunt
கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!

கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!

Tamilwire 4 days ago

மிழக சட்டமன்றத் தேர்தலில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷை தோற்கடித்து திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி (விஜயகுமார்) பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஒரு நபர் அமைச்சரையே நேரடியாக எதிர்த்து வெற்றி பெற்ற சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த மகேஷ், கட்சித் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர். துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்ற அடையாளமும் அவருக்கு இருந்தது. திருச்சி மாவட்டத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தனக்கு எதிராகக் கருதப்பட்ட கட்சியினரை படிப்படியாக ஓரங்கட்டி வந்தார்.

அத்தகைய ஓரங்கட்டலுக்கு ஆளானவர்களில் ஒருவர் தான் நவல்பட்டு விஜி. திருவெறும்பூர் தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலராக இருந்த விஜி, ஒரு நிகழ்ச்சிக்கான பேனரில் அமைச்சர் மகேஷின் புகைப்படத்தை இடம் பெறச் செய்யாததால் பெரும் பிரச்னைக்கு ஆளானார். மகேஷ் ஆதரவாளர்கள் அவரை தரக்குறைவாக விமர்சித்தனர். படிப்படியாக கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்.

இந்த அவமானத்தால் மனம் வருந்திய விஜி, தி.மு.க.விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அவர், தன்னை ஓரங்கட்டிய அதே அமைச்சர் மகேஷை நேருக்கு நேர் எதிர்த்து களமிறங்கினார். தேர்தல் முடிவில் விஜி அமைச்சரை தோற்கடித்து அசத்தியுள்ளார்.

இந்த வெற்றி தவெக-வுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்குள் இருந்த அதிருப்தியாளர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஒரு பேனர் புகைப்படத்துக்காக கட்சியில் இருந்து துரத்தப்பட்ட எனக்கு, மக்கள் நீதி வழங்கியுள்ளனர்' என விஜி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வின் உள்ளாட்சி அரசியல் மற்றும் அதிகாரப் போட்டிகள் இந்தத் தேர்தலில் பலரை வெளியேற்றியுள்ளன என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஒரு காலத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் அமைச்சரை தோற்கடித்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷை தோற்கடித்து திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி (விஜயகுமார்) பெரும் வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஒரு நபர் அமைச்சரையே நேரடியாக எதிர்த்து வெற்றி பெற்ற சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire