Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காவியா - அனிருத் GRAND RECEPTION..! பிரதமர் மோடி ஸ்பெஷல் வாழ்த்து..!!

காவியா - அனிருத் GRAND RECEPTION..! பிரதமர் மோடி ஸ்பெஷல் வாழ்த்து..!!

Tamilwire 1 day ago

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா கலாநிதி மாறனும், தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இணைந்த திருமணம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகப் பேசப்பட்டது.

நவம்பர் 11 ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணம், சுயமரியாதை முறையில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கலாநிதி மாறனும் அவரது மனைவி காவேரி மாறனும் அனிருத்தின் பெற்றோருடன் இணைந்து டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி, மணமக்களுக்கு கடிதம் மூலம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் பிரதமர், 'காவியா மற்றும் அனிருத், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்கும் இந்த மங்களகரமான திருமண நாளில், அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நல்வாழ்த்துக்களும்' என்று குறிப்பிட்டுள்ளார். தம்பதியினர் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் பாசத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து குடும்பத்திற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

திருமண விழாக்களுக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்து, இந்த மகத்தான தருணத்தில் தனது வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்துக் கடிதம், திருமணத்தின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire