Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!

கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!

Tamilwire 2 weeks ago

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுனைடெட் டெமாக்ரடிக் ஃபிரண்ட் (யு.டி.எஃப்) பெரும் வெற்றி பெற்று, 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 102 இடங்களை கைப்பற்றியது.

இது இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பத்தாண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீஷன். அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே வலுப்பெற்றது. 1964 மே 31 அன்று சதீஷன் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறந்தார். வழக்கறிஞரான அவர் 2001 முதல் பரவூர் தொகுதியில் தொடர்ச்சியாக ஆறு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார்.

2021 தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், ஐந்தாண்டுக் காலம் எல்.டி.எஃப் அரசை கடுமையாக எதிர்த்து வந்தார். 2026 தேர்தலில் யு.டி.எஃப்-ஐ வெற்றிக்கு இட்டுச் சென்ற 'கேப்டன்' என்று அழைக்கப்படும் அவர், பரவூர் தொகுதியில் சுமார் 20,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சதீஷனை முதலமைச்சராக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. முஸ்லிம் லீக் உள்ளிட்ட யு.டி.எஃப் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு வலுவான ஆதரவு தெரிவித்தன.

கட்சி தொழில்முறைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் அவர் பிரபலமாக இருந்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு கேரளாவின் புதிய முதல்வராக சதீஷன் தேர்வு செய்யப்பட்டார். 11 நாட்கள் இழுபறிக்கு பிறகு கேரள முதல்வரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது. இந்த நிலையில், கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 18ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் சதீசனுடன் 21 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுனைடெட் டெமாக்ரடிக் ஃபிரண்ட் (யு.டி.எஃப்) பெரும் வெற்றி பெற்று, 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 102 இடங்களை கைப்பற்றியது. இது இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பத்தாண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire