Dailyhunt
மீனவ கிராமங்களில் துண்டு பிரசுரம் கொடுத்த துர்கா ஸ்டாலின்; வாக்கிங்கில் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்; களைக்கட்டும் சீர்காழி...!

மீனவ கிராமங்களில் துண்டு பிரசுரம் கொடுத்த துர்கா ஸ்டாலின்; வாக்கிங்கில் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்; களைக்கட்டும் சீர்காழி...!

Tamilwire 1 week ago

சீர்காழி சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மீனவர் கிராமங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த மீனவ பெண்கள்

2026 சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்தியா கூட்டணியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக செந்தில் செல்வன் போட்டியிடுகிறார் .வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழையார், மடவாமேடு,தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து மடவாமேடு மீனவ கிராமத்தில் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பொது மக்கள் துர்கா ஸ்டாலினிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து தொடுவாய் கிராமத்தில் இரட்டை குழந்தைகளை தூக்கி கொஞ்சியபடி கூடியிருந்த மகளிருக்கு கைகுலுக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக மீனவ கிராமமான திருமுல்லைவாசலில் கிராமத்தில் மக்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டு மீனவ கிராமங்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என்று கூறி மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சீர்காழி சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மீனவர் கிராமங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த மீனவ பெண்கள்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire