Dailyhunt
முதல்வர் ஸ்டாலின் அனல் தெறிக்கும் பிரச்சாரம்... குமரியில் திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை..!!

முதல்வர் ஸ்டாலின் அனல் தெறிக்கும் பிரச்சாரம்... குமரியில் திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை..!!

Tamilwire 2 weeks ago

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் நாடு முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட் டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் நடத்தினார்.

மேலும், குளச்சல் வேட்பாளர் தாரகை விளவங்கோடு, வேட்பாளர் பிரவீன், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி மக்கள், அன்பால் தன்னை திக்குமுக்காட வைத்ததாகவும் திமுகவை ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வைக்க நீங்கள் ரெடியா என்றும் திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு ரெடியா எனவும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யில் இடம் பெற்றுள்ளகாங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் வேட்பாளர்களும் பங்கேற்றனர். இந்த பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் சங்கரன்கோவில் புறப்பட்ட சென்றார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் நாடு முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire