Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சாக்கடையில் அபிஷேக பால்..! திருப்பரங்குன்றம் கோவிலில் நேர்ந்த அவலம்... பக்தர்கள் வேதனை..!

சாக்கடையில் அபிஷேக பால்..! திருப்பரங்குன்றம் கோவிலில் நேர்ந்த அவலம்... பக்தர்கள் வேதனை..!

Tamilwire 2 weeks ago

துரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பால் குடங்களுடன் வந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வரும் இந்த திருவிழாவில், அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஏற்பாட்டில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில், முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் ஒரு குழாய் வழியாக அன்னதான மண்டபம் அருகே கொண்டு செல்லப்பட்டு, அங்கு அண்டாக்களில் நிரப்பி பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த முறையான ஏற்பாடு பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அந்த பால் சாக்கடை நீருடன் கலக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில பக்தர்கள் நேரில் கண்டதாகவும், வீடியோ பதிவுகளுடன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது திருப்பரங்குன்றம் கோயிலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வான பாலாபிஷேகம் அதிகாலை முதல் மதியம் வரை நீடிக்கும். பக்தர்கள் கொண்டு வரும் பால் குடங்கள் மூலம் முருகன், வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் ஆகியோருக்கு வழிபாடு நடைபெறுகிறது. இத்தகைய புனிதமான பாலாபிஷேகத்தின் எச்சம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது பாரம்பரியமாக இருந்தாலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குழாய் முறை இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. பால் வீணாகாமல் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த பால் சரியான முறையில் கையாளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பால் குடங்களுடன் வந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வரும் இந்த திருவிழாவில், அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire