Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சீமானுக்கு பிடிக்கல போல..! ஊழல் பெரு முதலைகள்... அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி..!!

சீமானுக்கு பிடிக்கல போல..! ஊழல் பெரு முதலைகள்... அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி..!!

Tamilwire 5 days ago

மிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையில் நீண்டகாலமாக நிலவி வந்த ஊழல் மற்றும் இடைத்தரகர் முறையை ஒழிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நடைபெற்று வந்த பண வசூலை முற்றிலுமாக நிறுத்தி, தகுதியின் அடிப்படையில் மட்டும் அனுமதி வழங்கும் வெளிப்படையான முறையை உறுதி செய்கிறது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன் என்று கேட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குதான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

அவருக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். தனியார் பள்ளிகளிடம் நடைபெற்ற வசூல் வேட்டையை நிறுத்தியிருப்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். ஊழல் பெரு முதலைகள் வெளிவந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஊழல் பெரு முதலைகள் வெளி வருவது பிடிக்காமல் சீமான் இவ்வாறு பேசுவது போல் தெரிவதாக பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையில் நீண்டகாலமாக நிலவி வந்த ஊழல் மற்றும் இடைத்தரகர் முறையை ஒழிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நடைபெற்று வந்த பண வசூலை முற்றிலுமாக நிறுத்தி, தகுதியின் அடிப்படையில் மட்டும் அனுமதி வழங்கும் வெளிப்படையான முறையை உறுதி செய்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire