Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

Tamilwire 3 days ago

மிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.65 முதல் ரூ.67 வரை விற்பனையாகி வருகிறது.

கடந்த மாதம் ரூ.45 அளவில் இருந்த விலை, சில வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண குடும்பங்கள் முதல் இனிப்பு தயாரிப்பு தொழில்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மொத்த மளிகை வியாபாரி சாமுவேல் ராஜ் இதுகுறித்து விளக்கும்போது, 'தமிழ்நாட்டிற்கு சர்க்கரை அனுப்பும் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள ஆலைகள் பதுக்கலில் ஈடுபடுவதே முக்கிய காரணம்' என்றார். அந்த மாநிலங்களில் பருவமழை சீரற்றதாக இருந்ததால் கரும்பு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் சந்தையில் சர்க்கரை விநியோகம் சுருங்கிவிட்டது.

மேலும், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இனிப்புப் பண்டங்கள் தயாரிக்க சர்க்கரை தேவை பெருமளவு அதிகரிக்கும் என்பதை முன்னறிந்து ஆலைகள் இருப்புகளை கட்டுப்படுத்தி வருகின்றன. இதனால் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இ-20 பெட்ரோல் திட்டம் காரணமாக கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி பெருகி வருகிறது. இதனால் சர்க்கரை தயாரிப்பிற்கு கிடைக்கும் கரும்பு அளவு குறைந்துள்ளது.

இந்தியாவின் சர்க்கரை இருப்பு குறைந்த நிலையில் இருப்பதால், அரசு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசு ஏற்கனவே பெரும் வாடிக்கையாளர்களுக்கு இருப்பு வரம்பு விதித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை பெரும் நுகர்வோர் 15 நாள் தேவைக்கு மேல் இருப்பு வைக்க முடியாது.

இருப்பினும், சந்தை நிலவரம் இன்னும் சீராகவில்லை. தமிழ்நாடு அரசும் பதுக்கலை கண்டறியும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.65 முதல் ரூ.67 வரை விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் ரூ.45 அளவில் இருந்த விலை, சில வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண குடும்பங்கள் முதல் இனிப்பு தயாரிப்பு தொழில்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire