Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

Tamilwire 2 weeks ago

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இருப்பினும் திமுக தலைவா ஸ்டாலின் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்பதை உறுதிப்படக் கூடியதால் காங்கிரஸ் கட்சிகளால் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அந்த சமயத்தில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி கட்சிகளை நாடி இருந்தது.

இருப்பினும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதை எடுத்து காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக்கு சென்று விட்டது. ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதை தமிழக வெற்றி கழகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், 2026 தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது என்றும் கூறினார்.

அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள் எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர் எனவும் ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் என்றும் கூறினார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த

இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், புதிய அரசு., புதிய நம்பிக்கை என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இருப்பினும் திமுக தலைவா ஸ்டாலின் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்பதை உறுதிப்படக் கூடியதால் காங்கிரஸ் கட்சிகளால் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அந்த சமயத்தில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி கட்சிகளை நாடி இருந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire