Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தவெகவிற்கு ஆதரவளிக்க போவதில்லை..." - முக்கிய கட்சியில் இருந்து வந்த அதி முக்கிய அறிவிப்பு..!

"தவெகவிற்கு ஆதரவளிக்க போவதில்லை..." - முக்கிய கட்சியில் இருந்து வந்த அதி முக்கிய அறிவிப்பு..!

Tamilwire 6 months ago

சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. குறிப்பாக தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று உருவெடுத்துள்ளது.

குறிப்பாக 118 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்னும் 10 நபருடைய ஆதரவு என்பது தமிழக வெற்றி கழகத்திற்கு வேண்டும். அப்பொழுதுதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையில், தவெக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தவெகவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவையும் பெற தவெக தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியை பொறுத்தவரை விடுதலை சிறுத்தை கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நான்கு கட்சிகளும் தலா இரண்டு இடங்களை வென்றுள்ளன. இந்த கட்சிகளுடைய ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கலாம் என தமிழக வெற்றி கழகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொயதீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் திமுக இந்திய யூனியன் யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவல்ல. இது கொள்கை ரீதியான கூட்டணி. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணின் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு முஸ்லிம் லீக் கட்டுப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது திமுக என்ன சொல்கிறதோ அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்கும் என்று கட்சியினுடைய தேசிய தலைவர் காதர் மொதீன் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு வெளியிலிருந்து ஆதரவோ அல்லது அந்த ஆட்சியில் பங்கு பெறக்கூடிய வாய்ப்போ இல்லை என்றும் தெரிகிறது. குறிப்பாக நாளை தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் தான் தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் தவெக ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் கடந்த தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும் இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கு வேண்டாம் வேணாலும் ஆதரவு அளிக்கலாம் ஏனென்றால் அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஏனெனில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருந்தால் தான் ஆதரவு அளிக்க முடியாது.

ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனியாக அவர்களுடைய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. இருப்பினும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாடை தற்பொழுது எடுத்திருக்கிறார்கள்.

சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. குறிப்பாக தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று உருவெடுத்துள்ளது. குறிப்பாக 118 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்னும் 10 நபருடைய ஆதரவு என்பது தமிழக வெற்றி கழகத்திற்கு வேண்டும். அப்பொழுதுதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையில், தவெக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தவெகவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire