Dailyhunt
தேர்தல் நெருங்கியாச்சு..! வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் கார்த்திக் மோகன் வேட்பு மனுத்தாக்கல்..!!

தேர்தல் நெருங்கியாச்சு..! வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் கார்த்திக் மோகன் வேட்பு மனுத்தாக்கல்..!!

Tamilwire 1 week ago

2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாது வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.

மொத்தம் நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ய அவகாசம் இருப்பதால் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுகவை பொருத்தவரை மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வில்லிவாக்கம் வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் முதல்வரின் மகள் செந்தாமரை ஆகியோர் பிரச்சாரம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் என்று வேட்பு மனு தாக்கல் செய்தார். சிக்கோ நகரில் உள்ள சமுதாய மையத்தில் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாது வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire