Dailyhunt
#TNElectionResults2026: தலைகீழாய் மாறிய கள நிலவரம்... 4வது சுற்றில் உதயநிதி எடுத்த விஸ்வரூபம்... குஷியில் திமுக...!

#TNElectionResults2026: தலைகீழாய் மாறிய கள நிலவரம்... 4வது சுற்றில் உதயநிதி எடுத்த விஸ்வரூபம்... குஷியில் திமுக...!

Tamilwire 1 week ago

மிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட முடிவுகள் மாநிலத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளன.

திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் முதல் சுற்று முடிவில் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதில் இருவரும் தங்களது செல்வாக்கை நிலைநாட்டி முன்னிலை பெற்றனர். இருப்பினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது நிலைமை மாறியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், முதல் சுற்று இயந்திர வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் பின்தங்கினார். 11 மணி நிலவரப்படி கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 12,916 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10,639 வாக்குகளுடனும், அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷணன் 3,246 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தபால் ஓட்டுகளில் முன்னிலை வகித்த நிலையில், முதல் சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார்.

ஆனால் தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். 11.30 மணிக்கு வெளியான 4ம் சுற்று நிலவரப்படி சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார்.

திமுகவின் மிக முக்கியமான இரண்டு தலைவர்களுமே ஆரம்பகட்டச் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிப்பது கட்சியினரை சற்றே நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட முடிவுகள் மாநிலத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளன. திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் முதல் சுற்று முடிவில் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire