Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#TNElectionResults2026..! தேர்தல் ரேசில் முந்தும் தவெக..! குஷியில் விஜய் குடும்பம்..!!

#TNElectionResults2026..! தேர்தல் ரேசில் முந்தும் தவெக..! குஷியில் விஜய் குடும்பம்..!!

Tamilwire 3 weeks ago

மிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதிர்ச்சி முடிவுகளைப் பதிவு செய்து வருகிறது.

பல தொகுதிகளில் முன்னிலை வகித்து, பாரம்பரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வை பின்னுக்கு தள்ளி, தவெக முன்னேறி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நல்ல செய்தியால் விஜய்யின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் நாளான இன்று, விஜய்யின் இல்லத்தில் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தவெகவின் முன்னிலையை அறிந்ததும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆரவாரத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து, வழிபட்டார்

இந்த மகிழ்ச்சியான சூழல், விஜய்யின் அரசியல் அறிமுகத்தை மிகப் பெரிய வெற்றியாக மாற்றும் விதமாக அமைந்துள்ளது. தவெக தனித்துப் போட்டியிட்ட இந்தத் தேர்தலில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டார். எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றுகளிலேயே அவர் இரு தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

மாநில அளவில் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும், பெரும்பான்மைக்கு (118) அருகில் சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. திமுக பின்னுக்கு தள்ளப்பட்டு மூன்றாவது இடத்தில் இருக்க, அதிமுக இரண்டாவது இடத்தில் போராடி வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் லிப்டில் இருந்து வந்தவுடன் அவரது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் கத்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்று வரும் நிலையில் முதலிடத்தில் இருந்து வரும் சூழலில் விஜயின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் கொண்டாடி வருகின்றனர். கண்கலங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் விஜய் குடும்பத்தினர். இது மட்டுமல்லாது தமிழக வெற்றி கழகத் தொண்டர்களும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதிர்ச்சி முடிவுகளைப் பதிவு செய்து வருகிறது. பல தொகுதிகளில் முன்னிலை வகித்து, பாரம்பரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வை பின்னுக்கு தள்ளி, தவெக முன்னேறி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நல்ல செய்தியால் விஜய்யின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire