Dailyhunt
#TNElectionResults2026..! தூத்துக்குடியை தன் வசமாக்கும் TVK ஸ்ரீநாத்..! கீதா ஜீவன் பின்னடைவு..!!

#TNElectionResults2026..! தூத்துக்குடியை தன் வசமாக்கும் TVK ஸ்ரீநாத்..! கீதா ஜீவன் பின்னடைவு..!!

Tamilwire 6 days ago

2026 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

இது தவெகவுக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. விஜய்யின் நெருங்கிய நண்பரும், கல்லூரி கால நண்பருமான ஸ்ரீநாத், திரைப்பட உலகில் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர்.

திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்த அவரது பயணம், தூத்துக்குடி மக்களின் ஆதரவுடன் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி தொகுதி தமிழ்நாட்டின் தென்பகுதியில் முக்கியமான இடம். துறைமுக நகரமாகவும், தொழில்துறை மற்றும் மீன்வளத்துக்குப் பெயர் பெற்ற இடமாகவும் அறியப்படுகிறது.

2021 தேர்தலில் திமுகவின் கீதா ஜீவன் வெற்றி பெற்றிருந்த இந்தத் தொகுதியில் 2026இல் தவெகவின் ஸ்ரீநாத் களமிறங்கினார். அதிமுகவின் எஸ்.டி. செல்லப்பாண்டியன், திமுகவின் கீதா ஜீவன் உள்ளிட்ட அனுபவம் மிக்க வேட்பாளர்களுக்கு எதிராக அவர் போட்டியிட்டார். விஜய்யின் அரசியல் அறிமுகத்திலிருந்தே ஸ்ரீநாத் தவெகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

திரைப்படங்களில் விஜய்யின் நண்பர் கதாபாத்திரங்களில் நடித்த அவர், இப்போது அரசியலிலும் நண்பரின் பக்கம் உறுதியாக நின்றார். சுமார் 20,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை தவெகவுக்கு முதல் பெரிய உந்துதலாக அமைந்துள்ளது. தூத்துக்குடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஸ்ரீநாத், சட்டமன்றத்தில் தனது பணியைத் தொடங்க உள்ளார். 10 சுற்றுகள் முடிவில் 20,658 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். மொத்தமாக ஸ்ரீநாத் இதுவரை 49,247 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

2026 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இது தவெகவுக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. விஜய்யின் நெருங்கிய நண்பரும், கல்லூரி கால நண்பருமான ஸ்ரீநாத், திரைப்பட உலகில் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire