Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தொடர் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! கன்னத்தில் கைவைக்கும் பெண்கள்..!!

தொடர் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! கன்னத்தில் கைவைக்கும் பெண்கள்..!!

Tamilwire 1 day ago

ங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன.

தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் விலை நிலவரம் (13/06/2026):

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறங்குமுகத்தில் தான் உள்ளது. இந்த விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஏற்றம் இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் இறங்குமுகத்தில் தான் தொடங்கியது. வாரத்தின் முதல் நாள் விலை குறைந்து அதன்பின் அதிகரித்து மீண்டும் குறைந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,10,880க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கும், கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்துகொண்டே வந்த தங்கம் விலை தற்போது அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்று கவலை அளிக்கிறது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவிற்கு ரூ.5,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விலை குறைந்து வந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

தங்கம் விலை நிலவரம் (13/06/2026):

வெள்ளி விலை நிலவரம்:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire