Dailyhunt
வரலாறு படைத்த விஜய்: தமிழகத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம்!

வரலாறு படைத்த விஜய்: தமிழகத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம்!

Tamilwire 1 week ago

மிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்திக் காட்டியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்ட முதல் களத்திலேயே திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. மொத்தம் போட்டியிட்ட 233 தொகுதிகளில், தவெக 108 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் தவெக சுமார் 34.92% (1,72,26,209) வாக்குகளைப் பெற்று, மற்ற அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், தவெக தமிழக அரசியலில் "கிங் மேக்கராக" மட்டுமல்லாமல், நேரடியாக ஆட்சி அமைக்கும் தகுதியையும் எட்டியுள்ளது.

இத்தேர்தல் முடிவுகள் பல ஜாம்பவான்களை அதிர வைத்துள்ளன. திமுக-வின் கோட்டையான கொளத்தூரில், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது இந்திய அரசியலையே உலுக்கியுள்ளது. ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு போன்ற தொகுதிகளில் சிட்டிங் அமைச்சர்களை வீழ்த்தித் தவெக வேட்பாளர்கள் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் அருண் ராஜ் ஆகியோர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்ற நிலையில், காரைக்குடியில் சீமானை வீழ்த்தித் தவெக வேட்பாளர் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.

விஜய்யின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரைத் தொலைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், நானி மற்றும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்து மழையைப் பொழிந்து வரும் நிலையில், "எவராலும் விஜய் ஆக முடியாது" என்று நடிகர் சிபி சத்யராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

"கூட்டம் வாக்குகளாக மாறாது" என்ற விமர்சனங்களைத் தகர்த்து, 1.72 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆதரவுடன் விஜய் தற்போது தமிழகத்தின் புதிய அரசியல் சகாப்தத்தைத் தொடங்கியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்திக் காட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்ட முதல் களத்திலேயே திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire