Dailyhunt
விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

Tamilwire 1 week ago

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க - ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் விலைகள் அதிகரித்தன.

மார்ச் 7ஆம் தேதியன்று, 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னர் மார்ச் 1ஆம் தேதியன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை 28 ரூபாய் அதிகரித்தது. அதேபோல, மார்ச் 7ஆம் தேதியன்று வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் 114.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி அதன் விலை 195.50 ரூபாய் முதல் 200 வரை உயர்த்தப்பட்டது.

மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை. அந்த வகையில் மே 1ம் தேதியான இன்று வணிக கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்ந்தியுள்ளன. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ஒரேடியாய் 993 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலையின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 3 ஆயிரத்து 237 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 14 கிலோ எடை கொண்டவீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் இருந்த போதும், ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர் ரூ.6500 வரை விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க - ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் விலைகள் அதிகரித்தன. மார்ச் 7ஆம் தேதியன்று, 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னர் மார்ச் 1ஆம் தேதியன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை 28 ரூபாய் அதிகரித்தது. அதேபோல, மார்ச் 7ஆம் தேதியன்று வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் 114.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி அதன் விலை 195.50 ரூபாய் முதல் 200 வரை உயர்த்தப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire