Dailyhunt
விஜயை ஆட்சியமைக்க விடணும்..! சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்..!

விஜயை ஆட்சியமைக்க விடணும்..! சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்..!

Tamilwire 3 days ago

டந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன.

தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும் இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான போதிய எம்எல்ஏக்கள் இல்லை.

இந்த சூழவில் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார். அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை பதவி ஏற்புக்கு முன்பே ஆளுநர் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போதிய ஆதரவு இல்லாததால் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக விஜய் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறார். முதற்கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு கோரி தவெக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.

விஜய் பதவியேற்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன் என சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பினார். ஜனநாயக மரபுகளின்படி தனிப்பெரும் கட்சியின் தலைவரான விஜயை உடனடியாக அழைத்து, அமைச்சரவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும் இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான போதிய எம்எல்ஏக்கள் இல்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire