Dailyhunt
விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

Tamilwire 5 days ago

திமுகவின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சி.வி. சண்முகம் உறுதி காட்டுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வட தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது சீவி சண்முகத்தின் தரப்பு கருத்தாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆட்சியில் பங்கு என்பதில் சி.வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கும் நிலையில் சி.விஜயபாஸ்கரும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறப்படுவதாகவும், ஆனால், கூட்டணி அமைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி என்ற நிலை கூட இல்லை என்பதால் ஆட்சியில் பங்கு பெற நிர்பந்திக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக சார்பில் நடைபெற இருந்து எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுக ஆதரவு தருமா என்பது விரைவில் தெரியவரும்.

அதிமுகவின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சி.வி. சண்முகம் உறுதி காட்டுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire