Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய்க்கு புது குடைச்சல்... ஆளுநர் காதுகளை எட்டிய முக்கிய குற்றச்சாட்டு... தவெக தலையில் இறங்கியது பேரிடி...!

விஜய்க்கு புது குடைச்சல்... ஆளுநர் காதுகளை எட்டிய முக்கிய குற்றச்சாட்டு... தவெக தலையில் இறங்கியது பேரிடி...!

Tamilwire 6 days ago

திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விளக்கம் கேட்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக (TVK) கட்சியில் இணைந்தது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இவர்களைத் தவிர, எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சிவபதி போன்ற பல முன்னாள் அதிமுக அமைச்சர்களும் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ராஜினாமாவின் பின்னணியில் குதிரைப் பேரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. குதிரைப் பேரத்தின் மூலமாகவே எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாக அதிமுகவினரும், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்கக்கூடும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததன் பின்னணியில் குதிரைப் பேரம் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆளுநர் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கோரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விளக்கம் கேட்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire