Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 வேலைவாய்ப்புகள்! தமிழகத்தில் 134 இடங்கள்!

பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 வேலைவாய்ப்புகள்! தமிழகத்தில் 134 இடங்கள்!

பேங்க் ஆஃப் பரோடாவில் நாடு முழுவதும் 2,482 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்திற்கு 134 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பட்டப்படிப்பு முடித்தவர்கள், வணிக வங்கியில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் மொழித் திறன் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 7, 2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam