Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிறந்த சில நிமிடங்களிலேயே ஸ்டைலாக போஸ் கொடுத்த குழந்தை! வைரலாகும் புகைப்படம்!

பிறந்த சில நிமிடங்களிலேயே ஸ்டைலாக போஸ் கொடுத்த குழந்தை! வைரலாகும் புகைப்படம்!

Tamil Yugam News 6 days ago

எகிப்து நாட்டில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை ஒன்று கால் மேல் கால் போட்டு சாவகாசமாகப் படுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

குழந்தைகள் நல மருத்துவர் இஸ்லாம் எல்டே தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்த இந்தப் புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பொதுவாகப் பிறந்த குழந்தைகளின் அழகான தருணங்களைப் பார்த்து ரசிக்கும் நிலையில், இந்தக் குழந்தையின் வித்தியாசமான தோற்றம் இணையவாசிகளைப் புன்னகைக்க வைத்துள்ளது. "புகைப்படம் எடுக்கப் போகிறீர்களா? இருங்கள், போஸ் கொடுக்கிறேன்!" என்று குழந்தையே சொல்வதுபோல் நகைச்சுவையாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam