கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பத்தணம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு நாளை (ஆக.2) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை நீடித்து வருவதையடுத்து, கோழிக்கோடு, மலப்புறம், வயநாடு, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

