ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெளிமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காஷ்மீர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

