Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மினி அதிரசம் செய்வது எப்படி..??

மினி அதிரசம் செய்வது எப்படி..??

Tamil Yugam News 3 weeks ago

தேவையான பொருட்கள்

3 கப் அரிசி மாவு
2 கப் கருப்பட்டி
1 கப் தண்ணீர்
4 கப் எண்ணெய்
2 ஏலக்காய்

செய்யும் முறை

1. முதலில், ஒரு பானையில் கருப்பட்டி, ஏலக்காய் மற்றும் தண்ணீரை ஒன்றாக சேர்த்து காய்ச்சவும்.

2. காய்ச்சிய கருப்பட்டியை சுட சுட அரிசி மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

3. நன்றாக பிசைந்து 2 நாட்கள் மூடி
வைக்கவும்.

4. 2 நாட்கள் கழித்து தேவைபட்டால் இன்னும் கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்து மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.

5. ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளில் கொஞ்சம் அரிசி மாவு தடவி பிசைந்த மாவை அதில் வைத்து கால் அங்குல அளவிற்கு தேய்க்கவும்.

6. அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு தோய்த்த மாவை மெது வடைக்கு பாேல் நடுவில் ஓட்டை பாேட்டு
பொரித்து எடுக்கவும்

சமைக்கும் நேரம்:

1. மாவு தயார் செய்ய - 2 நாட்கள்
2. சமைக்கும் நேரம் - 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 30 சிறிய அதிரசம் கிடைக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam