Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' (MCM)

பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' (MCM)

Tamilscreen 3 days ago

திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் சிக்கல்களை சுவாரசியமாக சொல்லும் திரைப்படம்

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய படம் 'ஹலோ மிஸ்'

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா கதாநாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரபு ஏகாம்பரம், "90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்," என்றார்.

'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பு: சூரிய முருகன்; பாடல்கள்: வி.ஜெ.பி. ரகுபதி; இயக்குநர் குழு: ஸ்ருஜித், நவீன், ஜெய்சங்கர்

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilscreen