Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'கட்டா குஸ்தி 2' 50வது நாள் வெற்றி விழா

'கட்டா குஸ்தி 2' 50வது நாள் வெற்றி விழா

Tamilscreen 2 days ago

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கிய 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் சார்பில் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சீல்டுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஜீத்து ஜோசப் கதையில் உருவான படம்

விழாவில் இயக்குநர் செல்லா அய்யாவு, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், விஷ்ணு விஷால், ரம்யா கிருஷ்ணன், பிரபுதேவா, ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா, யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஒரு படம் இன்றைய சூழலில் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது மிகப்பெரிய சாதனை என படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது.

'கட்டா குஸ்தி 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'கட்டா குஸ்தி 3' உருவாகும் எதிர்பார்ப்பும் விழாவில் வெளிப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilscreen