Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடு

மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடு

Tamilscreen 2 weeks ago

மிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான 'மன்னாரு' பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர்.

இந்தப் பாடலை, தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து பாடியுள்ளார் மற்றும் கென் ராய்சன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.

துல்கர் சல்மானின் படம் ஆகஸ்ட் 20ஆம் தேதி ரிலீஸ்

மேலும், மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்த 'மன்னாரு' பாடல், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆகஸ்ட் 8 இன்று முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது.

இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மன்னாரு' பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilscreen