Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நயன்தாரா - கவின் நடித்துள்ள 'ஹாய்' ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ்

நயன்தாரா - கவின் நடித்துள்ள 'ஹாய்' ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ்

Tamilscreen 6 days ago

மிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ' ஹாய் ' திரைப்படம், ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை அறிவிக்கும் வகையில் படக்குழு பிரத்யேக அறிவிப்பு காணொளியை வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.

குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள 'ஹாய்' படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

யாஷ், தாரா சுதாரியா நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின்…

ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று, ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக அறிவிப்பு காணொளி மூலம், 'ஹாய்' திரைப்படம் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விஷ்ணு எடவன்

"'ஹாய்' என்ற தலைப்பைப் போலவே இது எளிமையான, இனிமையான, மனதை மகிழ்விக்கும் திரைப்படம். குடும்பத்துடன் இரண்டே கால் மணி நேரம் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இப்படம் உருவாகியுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய மூன்று இடங்களை பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'யாரடி நீ மோகினி' போன்ற படங்களைப் போல வில்லன் இல்லாத குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'ஹாய்' உருவாகியுள்ளது."

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' உள்ளிட்ட வெற்றிப்படங்களில் பாடலாசிரியராகவும், படைப்புக் குழுவில் முக்கிய பங்காற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதாலும், நயன்தாரா - கவின் முதன்முறையாக இணையும் கூட்டணியாலும், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இடம்பெற்றிருப்பதாலும், 'ஹாய்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக வணிக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilscreen