Dailyhunt
"17 கோடி ரூபாய் தங்கம்.. 6 சொகுசு கார்கள்.. கையில் 2 லட்சம் மட்டுமே". 11 கிலோ தங்கத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஹரி நாடார். சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

"17 கோடி ரூபாய் தங்கம்.. 6 சொகுசு கார்கள்.. கையில் 2 லட்சம் மட்டுமே". 11 கிலோ தங்கத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஹரி நாடார். சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Tamizhan media 2 weeks ago

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட ஹரி நாடார் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கடந்த 2019 நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் அறிமுகமான இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ‘நடமாடும் நகைக் கடை’யாக வலம் வந்து 37,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவின் தோல்விக்கு, ஹரி நாடார் பிரித்த வாக்குகளே முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, பண மோசடி மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சுமார் 34 மாதங்கள் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். சிறை வாசத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் விதமாக, அதே ஆலங்குளம் தொகுதியில் களம் காண்கிறார்.

தனது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின்படி, ஹரி நாடாரிடம் 11 கிலோ 650 கிராம் தங்கம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் இன்றைய மதிப்பு சுமார் 17.06 கோடி ரூபாயாகும். மேலும், ஃபார்ச்சூனர், இன்னோவா, டாடா சஃபாரி உட்பட 6 சொகுசு வாகனங்கள் தன்னிடம் உள்ளதாகவும், கையில் 2.50 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருந்ததால், அந்த ஆண்டுகளில் தமக்கு வருமானம் ஏதும் இல்லை என்பதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அவர் மீது மொத்தம் 24 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகக் களம் இறங்கியுள்ள ஹரி நாடாரின் வருகை, அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுகளில் மீண்டும் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media