Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"1993 பாணியில் 2026-ல் மாற்றம்".. திமுகவில் உடையும் மா.செ-க்களின் கோட்டை?.. உதயநிதியின் 'மாஸ்டர் பிளான்'.. அதிர்ச்சியில் சீனியர்கள்...!

"1993 பாணியில் 2026-ல் மாற்றம்".. திமுகவில் உடையும் மா.செ-க்களின் கோட்டை?.. உதயநிதியின் 'மாஸ்டர் பிளான்'.. அதிர்ச்சியில் சீனியர்கள்...!

Tamizhan media 6 days ago

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அடிமட்ட அளவில் மறுசீரமைக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய களஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்துக்களைப் பெற்று விரிவான அறிக்கையை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளன. குறிப்பாக, தலைவரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும், 15-க்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளிலும் ஏற்பட்ட படுதோல்வி அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த களஆய்வு அறிக்கையின் மூலம், பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களின் எல்லையற்ற அதிகார மையமும், வேட்பாளர் தேர்வு முதல் நிர்வாகம் வரையிலான தன்னிச்சையான முடிவுகளுமே கட்சியின் பலவீனத்திற்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலில் தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகளின் எழுச்சியையும், உட்கட்சி அதிருப்தியால் நிர்வாகிகள் கட்சித் தாவுவதையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பதை திமுக தலைமை உணர்ந்துள்ளது.

இதற்கு தீர்வாக, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக 'தொகுதி செயலாளர்' என்ற புதிய பொறுப்பை உருவாக்கும் அதிரடி யோசனையை அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ளார். கடந்த 1993-ல் வைகோ பிரிந்து சென்றபோது ‘பகுதி செயலாளர்’ பதவி உருவாக்கப்பட்டது போல, தற்போது மாவட்ட செயலாளர்களின் அதிகாரத்தைப் பகிர்ந்து, 234 தொகுதிகளையும் தனித்தனி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இத்திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. இப்புதிய பொறுப்புகளில் பெரும்பாலானவை இளைஞரணி நிர்வாகிகளுக்கு வழங்கப்படலாம் என்பதால் உதயநிதியின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இளைஞர்களை நேரடியாக தொகுதி அளவில் பொறுப்பில் அமர்த்துவது, அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கவும், தேர்தல் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்தவும் உதவும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்களாக இருக்கும் சீனியர் நிர்வாகிகள், இப்புதிய பதவி தங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்படுவதாகக் கருதி கவலையிலும் அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளனர். தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் தமிழகம் திரும்பியதும் இதுகுறித்த விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media