Dailyhunt
"2026 ஜஸ்ட் சாம்பிள் தான்.. மெயின் பிக்சர் 2031-ல இருக்கு.  தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் 'குட்டி' ரசிகர்கள். விஜய்யின் சைலண்ட் ஸ்கெட்ச்".!!!

"2026 ஜஸ்ட் சாம்பிள் தான்.. மெயின் பிக்சர் 2031-ல இருக்கு. தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் 'குட்டி' ரசிகர்கள். விஜய்யின் சைலண்ட் ஸ்கெட்ச்".!!!

Tamizhan media 1 week ago

மிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக முதல்முறை தோல்வி முகத்தை சந்தித்துள்ள நிலையில், களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே 108 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பது திராவிடக் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்க்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆன்லைன் விமர்சனங்களை உடைத்தெறிந்து, 18 முதல் 40 வயது வரையிலான இளைஞர்களும், பெருவாரியான பெண்களும் தவெக-விற்கு வாக்களித்திருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உறுதி செய்துள்ளது.

தற்போதைய இந்த வெற்றியை விட, 2031 தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்குக் காத்திருக்கும் ‘அரசியல் பிரளயம்’ தான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. தற்போது 13 முதல் 17 வயதுக்குள் இருக்கும் சுமார் 50 லட்சம் பள்ளி மாணவர்கள் அடுத்த தேர்தலில் புதிய வாக்காளர்களாக களம் இறங்குவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதால், இந்த 50 லட்சம் வாக்குகளும் ஒட்டுமொத்தமாக தவெக பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது. ஒரு கட்சியின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய இந்த மாபெரும் வாக்கு வங்கி, வருங்காலத்தில் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு சதவீதத்தை வரலாறு காணாத அளவிற்குச் சரித்து, திராவிடக் கட்சிகளின் இருப்பிற்கே சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதோடு, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பல இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளனர். தவெக தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை இன்னும் எட்டவில்லை என்றாலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே சூடுபிடித்துள்ளன. சில கட்சிகள் விஜய்யுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதால், திராவிடக் கட்சிகளின் தயவின்றி தவெக ஆட்சி அமைக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இப்போதே உடைந்து அழும் நிலையில் இருக்கும் திமுகவினர் மற்றும் அதிமுகவினருக்கு, இந்த ‘தளபதி’யின் எழுச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் பெரிய சவால்களைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media