Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2029-ல் விஜய்தான் PM?.. காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்த அந்த ஒரு அறிக்கை.. தவெக - காங்கிரஸ் கூட்டணியில் வெடித்த பூகம்பம்.!

2029-ல் விஜய்தான் PM?.. காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்த அந்த ஒரு அறிக்கை.. தவெக - காங்கிரஸ் கூட்டணியில் வெடித்த பூகம்பம்.!

Tamizhan media 2 weeks ago

கூட்டணி உருவான மூன்றே மாதங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் காங்கிரஸிற்கும் இடையே பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்து மோதல்கள் வெளிப்படையாக வெடித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கட்சித் தலைமைகள் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வாய் திறக்காத நிலையில், இரண்டாம் கட்டத் தலைவர்கள் மேடைகளிலும் ஊடகங்களிலும் பரஸ்பரம் அறிக்கை போர்களை நடத்தி வருவது இருதரப்பு தொண்டர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் முழுமையாக இருக்கும் சூழலில், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளிலும் கூட்டணி அடித்தளத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல், இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்ற முதிர்ச்சியற்ற மோதல்களில் ஈடுபடுவது இரு கட்சிகளின் எதிர்காலத்திற்கும் மக்கள் மத்தியில் அவர்களின் நம்பகத்தன்மைக்கும் உகந்ததல்ல.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media