Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"25 அடி உயரத்தில் தொங்கி." 10-வது மாடியில் இருந்து குதித்த புதுப்பெண். மரக்கிளையில் சிக்கி போராட்டம்.! பகீர் சம்பவம்.!!

"25 அடி உயரத்தில் தொங்கி." 10-வது மாடியில் இருந்து குதித்த புதுப்பெண். மரக்கிளையில் சிக்கி போராட்டம்.! பகீர் சம்பவம்.!!

Tamizhan media 1 week ago

மும்பை பாண்டுப் மேற்கு பகுதியில் உள்ள லேக் ரோட்டில் அமைந்துள்ள 'சன்ஷைன்' என்ற 10 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் 10-வது மாடி ஜன்னலிலிருந்து பிரதிஷா ஹிவ்ராலே (26) என்ற பெண் திடீரெனக் கீழே குதித்துள்ளார்.

ஆனால், அவர் நேரடியாகத் தரையில் விழாமல், கட்டிடத்திற்கு அருகில் இருந்த பெரிய மரத்தின் கிளைகளில் விழுந்து தரைக்கு மேலே சுமார் 20 முதல் 25 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். தகவலறிந்து காலை 9:32 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை தீயணைப்புத் துறையினர், ஏணிகளைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.

மரத்தில் விழுந்ததில் மரக்கிளை குத்தி இடது தொடையில் பலத்த காயமடைந்த பிரதிஷா, உடனடியாக தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காகச் சீயோன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 மாதங்களுக்கு முன்புதான் இவருக்குத் திருமணம் நடந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media