Dailyhunt
3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்..  பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்.!

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்.!

Tamizhan media 3 days ago

ர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை நோக்கி திடீரென ஓடிவந்த நாய், அவனது கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றது. இந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாயின் பிடியில் சிக்கிய சிறுவன் அலறியதைக் கேட்டு, அங்கிருந்த மக்கள் உடனடியாக ஓடிவந்து நாயை விரட்டிச் சிறுவனை மீட்டனர். இருப்பினும், அந்த நாய் சிறுவனை விடாமல் கடித்துக் குதறியதில் அவனுக்குக் கழுத்து மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அந்தச் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். அவனது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் உள்ளூர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தெருநாய் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media