Dailyhunt
50 ஆண்டுகால திராவிட அரசியலை ஓரம் கட்டிய விஜய். சைலண்ட்டாக சம்பவம் செய்த தளபதி.  தமிழக அரசியலில் மெகா புரட்சி..!

50 ஆண்டுகால திராவிட அரசியலை ஓரம் கட்டிய விஜய். சைலண்ட்டாக சம்பவம் செய்த தளபதி. தமிழக அரசியலில் மெகா புரட்சி..!

Tamizhan media 1 week ago

மிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே மகத்தான வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 233 தொகுதிகளில் 108 இடங்களை அதிரடியாகக் கைப்பற்றியதுடன், ஒட்டுமொத்தமாக 35 சதவீத வாக்குகளை அள்ளி தேர்தல் களத்தையே அதிர வைத்துள்ளது. அறிமுக தேர்தலிலேயே இத்தனை பெரிய வெற்றியைப் பெற்று, தமிழகத்தின் முதன்மை அரசியல் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் தொடங்கப்பட்ட புதிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில், விஜய்யின் தவெக நிகழ்த்தியுள்ள இந்த வாக்குச் சாதனை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன் 2013-ல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 29.5 சதவீத வாக்குகளையும், 2014-ல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 27.9 சதவீத வாக்குகளையும் பெற்றதே சாதனையாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி தவெக 35 சதவீத வாக்குகளைப் பெற்று, கடந்த 26 ஆண்டுகளில் ஒரு புதிய கட்சி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதம் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சமீபத்தில் பீகாரில் பிரஷாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி 3.44 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்த நிலையில், விஜய்யின் கட்சி இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஆட்சிக் கட்டிலை நெருங்கியுள்ளது. தனிப்பெரும்பான்மைக்குச் சில இடங்களே குறைவாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் தீவிரமாகத் தயாராகி வருகிறார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திய விஜய்யின் வியூகம், மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களிடம் எடுபட்டுள்ளதையே இந்த வெற்றி காட்டுகிறது.

தமிழக அரசியலில் இந்த மெகா ட்விஸ்ட் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட கால அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் விஜய் நிகழ்த்தியுள்ள இந்த மாயாஜாலம், தமிழக அரசியலின் திசையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டின் அரசியல் களம் புதிய பரிமாணத்தை எட்டும் என்பதுடன், மக்கள் நலனை மையப்படுத்திய புதிய ஆட்சி மாற்றத்தை நோக்கி தமிழகம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media