Dailyhunt
"83,374 Vs 83,375" ஒரே ஒரு ஓட்டால் மாறிய தலைவிதி. தமிழக தேர்தல் வரலாற்றையே அதிர வைத்த திருப்பத்தூர் ரிசல்ட்..!!

"83,374 Vs 83,375" ஒரே ஒரு ஓட்டால் மாறிய தலைவிதி. தமிழக தேர்தல் வரலாற்றையே அதிர வைத்த திருப்பத்தூர் ரிசல்ட்..!!

Tamizhan media 1 week ago

மிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட தவெக, ஒரு மூத்த அமைச்சரையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் இறுதிவரை நீடித்த பரபரப்பில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்று, நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டார். ஒரு வாக்கு என்பது எவ்வளவு வலிமையானது என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ள நிலையில், திருப்பத்தூர் தொகுதியின் இந்த முடிவு தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media